Breaking
Sun. Nov 24th, 2024

 

-றிம்சி ஜலீல்-

அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்டுக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே வசந்தம்Tvயின் அதிர்வு நிகழ்ச்சி சில வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது வழக்கம் அந்தவகையில் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொள்வதினால் அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியை நேரலையாக பார்வையிட்டிருந்தனர்.

இதற்க்கு ஒரு காரணமும் உள்ளது அதாவது அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கின்றது அதிலும் குறிப்பாக கடந்த மாதம் 21ம் திகதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கின்றது என்று ஊடகங்கள் போலியான கருத்துக்களை வெளியிட்டதுமேயாகும்.

எது எப்படியோ இன்றைய அதிர்வு நிகழ்ச்சியை என்னாலும் பார்வையிடக்கிடைத்தது அமைச்சரிடம் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு தடுமாற்றமுமின்றி சிறப்பாக பதில்களை வழங்கியிருந்தார்.

அத்தோடு இன்றைய நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது பொதுவாக இப்படியான நிகழ்ச்சிகள் செய்யும் போது கோடிகளுக்கு விலைபோகும் விளம்பர இடைவேளைகள் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது இருபது நிமிடங்களுக்கு ஒரு முறையாவது இருக்கும் ஆனால் இன்று இந்த நிகழ்ச்சியில் அப்படியொரு விளம்பர இடைவேளையை காணமுடியவில்லை.

மேலும் கேள்வி கேட்க்கின்றவர்கள் சில போது அரசியல்வாதிகளை குறுக்கே நிறுத்தி கேள்விகளை கேட்க்கின்ற வழமையை இன்று காணமுடியவில்லை.

எல்லாமே ஒர் இடத்தில் மௌனித்து கண்ணீர் விடுகின்ற ஒரு சந்தர்ப்பம் இன்றைய அதிர்வு நிகழ்வில் காணப்பட்டது அதுதான் முஸ்லிம் பள்ளிகளை உடைத்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் சொன்ன விடையமும் அவரே அழுத நிகழ்வு.

அந்த நிகழ்வோடு சம்மந்தப்படுத்தி உண்மையான ஒரு நிகழ்வை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும் அதாவது குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற இனவாத தாக்குதல்களை பார்வையிட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வந்திருந்தார் ஒவ்வொரு கிராமங்களையும் பார்வையிட்டுவிட்டு என்னுடைய கிராமமான மடலஸ்ஸ கெகுணகொல்ல பகுதிக்கு இஷா தொழுகையின் பின்னர் வந்திருந்தார்.

அங்கு வந்த போது அவருக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை போகும் போது நான் சென்ற எந்த இடத்துக்கும் எனக்கு பாதுகாப்பு எதுவும் தரப்படவில்லை அல்லாஹ் பாதுகாப்பான் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பின்னர் அவரோடு ஒவ்வொரு கிராமங்களையும் பார்வையிடச் சென்ற முன்னால் மாகாண சபை உறுப்பினர் நஸீர் அவர்கள் என்னிடம் சொன்னார் ஒரு கிராமத்தில் சகோதரர் ஒருவர் தன்னுடைய தந்தை மரணித்த போது கூட நான் அழுததில்லை இன்று இந்த பள்ளியை உடைத்திருக்கின்றார்களே என்று சொன்னவுடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழுதுவிட்டார் என்றார்.

இன்றும் அதே அழுகையை வசந்தம் Tvயின் நேரடி நிகழ்வில் பார்த்ததும் நானும் அழுதுவிட்டேன் நிச்சயமாக பலரும் அழுதிருப்பார்கள்.

சமூகத்துக்காக குரல் கொடுக்கும் இப்படியான அமைச்சர்களுக்காக ஒன்றுபட்ட சமூகமாக பிரார்த்தனை செய்வோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *