Breaking
Tue. Nov 26th, 2024

வவுனியாவிற்கு நாளைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கான தீவிர ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது.

அதில் பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது.

இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் 1000 பேருக்கு சுயதொழில் உதவிகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் காணிப்பிரச்சினை, ஆள் அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் நடமாடும் சேவைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் வரவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தலைமையில் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *