மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவை நடவடிக்கைகளை தடையின்றி நடத்தி செல்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய அந்த சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை நாளை முதல் செயற்படுத்தப்படும்.
வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில்கள் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும். அத்துடன் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 10ஆம் திகதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.