Breaking
Tue. Nov 26th, 2024

நாடாளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது,

ஆளும்கட்சியின் ஆசனத்தில் அமரப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று மோசமான அரசாங்கம் ஒன்று உள்ளதாகவும் அதனை எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் ஆசனம் பெறுவதற்கு நாளைய தினம் தீர்மானிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் கட்சியினர் ஆசனத்தை பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நாளைய தினம் நாடாளுமன்றத்தில் பதற்றமான நிலை ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்கட்சியின் ஆசனங்கள் வெறுமையாக உள்ளன.

நாம் அந்தப் பகுதியில் அமரப் போகிறோம் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *