ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தொலைபேசியூடாக இடம்பெற்றுள்ளது.
மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.