பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“நாளைய நிலைபேறுக்கான இற்றைய பால் நிலை சமத்துவம்” அதிதியாக ஸ்ரான்லி டி மெல் கௌரவிப்பு

மன்னார் மாவட்ட செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது மகளிர் தின விழா

பால் நிலை பாரபட்சத்தை தகர்ப்போம் எனும் தொனிப்பொருளில் 2022 ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின விழா மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (8) காலை 9 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது

மன்னார் கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களால் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்னார் உள்ளுராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் பெண் தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இதன்பது உள்ளூர் பெண்கள் தொழில் முயற்சியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் நேற்று மரணம்

wpengine

பாராளுமன்ற தேர்தலின் பின்பு! வேலைவாய்ப்பு

wpengine

65 ஆயிரம் பொருத்து வீடுகளில் எந்த குறைப்பாடுகளும் இல்லை – சுவாமிநாதன்

wpengine