பிரதான செய்திகள்

நாளையுடன் முடிவடையும் அரச ஊழியர்கள் சுற்றுநிருபம்

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது.

அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அண்மையில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும்

wpengine

அனந்தி சசிதரனுக்கு ஆங்கில மொழி தெரியுமா?

wpengine

சமூகவலைதளத்தில் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.

wpengine