பிரதான செய்திகள்

நாய் கூண்டில் அடைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கே ?

இலங்கை நாட்டின்உயரிய சபையானபாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும்பல்லாயிரம் மக்களின்ஆதரவு பெற்ற  அமைச்சர்ஒருவரின் காதை பிடித்துவெளியே போடுவேன்என ஞானசார தேரர்கூறியிருப்பதானது முழுநாட்டையும் அவமதிக்கும்செயல் என பானதுறைபிரதேச சபையின்முன்னாள் தலைவர்இபாஸ் நபுஹான்வெளியிட்டுள்ளஅறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனதுஅறிக்கையில்

மேலும்குறிப்பிடுகையில்…

இம் மாதம் 26ம் திகதிகொழும்பில் இடம்பெற்றஊடகவியலாளர்மாநாட்டில் கருத்துவெளியிட்ட ஞானசாரதேரர், அமைச்சர்றிஷாதை மிகக்கடுமையாக தாக்கி பேசிஉள்ளார்.அவரதுவிமர்சனம் சரியானதாஅல்லது பிழையானதாஎன்பதற்கு அப்பால், ஒருஅமைச்சரை விமர்சனம்செய்ய, அதற்கென்றுதகுந்த முறை உள்ளது.அந்த முறையைமுழுமையாக மீறியேஞானசார தேரர்விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்றம் என்பதுஒரு நாட்டின் உயரியசபை. அந்த சபையில்அங்கத்துவம்வகிப்பவர்கள்கௌரவத்துக்குரியவர்கள். அவர்கள் இலங்கைநாட்டின்பல்லாயிரக்கணக்கானமக்கள் ஆதரவைபெற்றவர்கள்.பாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும்சாதாராண உறுப்பினரைவிட, ஒரு அமைச்சர்இன்னும்மரியாதைக்குரியவர்.அவர்களை “ காதைபிடித்து வெளியேபோடுவேன் ” எனகூறுவதுஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இவர்களைஅவமானப்படுத்துவதுமுழு நாட்டையும்அவமானப்படுத்துவதுபோன்றாகும். இந்தஅவமானங்களைசந்திக்கும் மக்கள்பிரதிநிதிகள், எவ்வாறுமக்கள் முன்னிலையில்நெஞ்சை நிமிர்த்திசெயற்படுவார்கள்?

இவ்வாட்சிகாலப்பகுதியில் ஞானசார தேரர் மிதமிஞ்சியசெயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார். யாரையும்அவர் மதிப்பதாகயில்லை.அந்தளவு கௌரவம்வழங்குமளவு இவர்நல்லவருமல்ல. இவரதுசெயற்பாடுகள்சிறந்தவைகளுமல்ல.குறைந்தது இந்தஆட்சியானதுகௌரவத்துக்குரிய அமைச்சர்களின்மரியாதையையாவதுதக்க வைத்துக்கொள்ளும்வகையில், இப்படிகருத்துக்களைவெளியிடும் ஞானசாரதேரர் போன்றவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம்கூறுகிறோம்.

முன்னதாக ரனில்விக்ரமசிங்கவை மிகமோசமாக திட்டித்தீர்த்தஞானசாரரை வேடிக்கைபார்த்த நல்லாட்சி அரசுஅமைச்சர்களை அவர்விமர்சிக்கும் போதுஅதற்கு எதிராகநடவடிக்கை எடுக்கும் எனநாம் எதிர்பார்க்கமுடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹக்கீம் பணம் பெற்றுக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கின்றார்.

wpengine

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

wpengine

பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் அல்குர்ஆன் சம்பியன் விருதுக்கு விண்ணப்பம் கோரல்

wpengine