பிரதான செய்திகள்

நாய்கள் சண்டையிடுவது போல் முசலி பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

– முகுசீன் றயீசுத்தீன் –

முசலி மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேறியுள்ள போதிலும் இன்னும் அவர்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலுக்குத் திரும்பவில்லை.

மக்களின் அறியாமை, வறுமை, அரசியல் வெறித்தனம் என்பன இத்தகைய துன்பியல் நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.

தொழில் முயற்சி, பிள்ளைகளின் கல்வி, மார்க்க செயற்பாடுகள், பண்பாடான நடத்தை, உறவுகளைப் பேணல், பிரயோசமான பொழுது போக்குகள், பிறர் நலன் பேணல் போன்றவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.

அவ்வப்போது சில வீடுகள், சில வாழ்வாதாரப் பொருட்கள் வரும். தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகமிருக்கும். அவை முறைப்படி வழங்கப்படவும் மாட்டா. முட்டிமோதி, அடிபிடிப்பட்டு, அவமானம் பெற்று, அலைக்கழிக்கப்பட்டு சிலருக்குக் கிடைக்கப்பெறும்.

இவ்வாறே எப்போதாவது கொஞ்சம் தெருவிளக்குகள் வரும். பல கிராமங்களில் தேவையுடைய பல இடங்கள் இருக்கும். மறுபடி என்ன!

சில முட்களுக்காக இறைச்சிக்கடையில் நாய்கள் சண்டையிடுவது போல் பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

Related posts

கணவனின் காதல் லீலை! மனைவி தற்கொலை

wpengine

ஆயிரம் கனவுகளுடன் இல்லறத்தை தொடங்கிய இளம் ஜோடி

wpengine

500 மில்லியன் ரூபா இழப்பீடு – அர்ச்சுனா எம்பிக்கு வந்த அடுத்த சோதனை .

Maash