பிரதான செய்திகள்

நாமல் குமாரவின் தொலைபேசி சர்வதேச பகுப்பாய்வுக்கு

ஊழலுக்கு எதிரான படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியுடன், குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு ஹொங்கொங் பயணமாகினர்.

குறித்த தொலைபேசியில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், குரல் பதிவுகளை ஆய்வு செய்து, அவற்றை மீளபெறும் நோக்கிலேயே இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, குறித்த தொலைபேசியை சர்வதேச மட்ட ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கழிவு நீரை அகற்ற முடியாத முசலி பிரதேச சபை நிர்வாகம்! பிரதேச மக்கள் விசனம்

wpengine

கூட்டமைப்புக்குள் தொடர் குழப்பங்கள்

wpengine

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பணம் உழைக்கும்! மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரிச்சங்கம்! பலர் கண்டனம்

wpengine