2017ஆம் வருடம் முடிந்து 2018ஆம் வருடம் பிறந்துள்ளது. அந்த வகையில் புதிய வருடத்தின் ஆரம்ப நாளான ஜனவரி 1ஆம் திகதி அரசியல் தரப்பினரிடம் நடந்த முக்கியமான சம்பவம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய வருடம் பிறந்த கடந்த முதலாம் திகதி போய தினமாகும். அது திங்கட் கிழமை என்பதால், ஜனாதிபதிக்கு பல பணிகள் இருந்தன.
அன்றைய தினம் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு பலர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு இடையில் ஜனாதிபதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்த ஜனாதிபதியின் உதவியாளர், “சார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உங்களுடன் தொடர்புக்கொள்ள வேண்டுமாம், அழைப்பை மாற்றி விடவா?” எனக் கேட்டுள்ளார்.
“தொலைபேசி அழைப்பில் யார் ”என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச” என்று கூறியதாக உதவியாளர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு ஆச்சரியமடைந்த ஜனாதிபதி அழைப்பை தனக்கு இணைக்குமாறு கூறியுள்ளார்.
இதன்போது “என்ன நாமல்.. என்ன அவசரமாக.. ஏதாவது பிரச்சினையா?“ என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நாமல் “இல்லை ஜனாதிபதி அவர்களே.. எந்த பிரச்சினையும் இல்லை…
புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்க உங்களை தொடர்பு கொண்டேன்….
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..” எனக் கூறிவிட்டு நாமல் ராஜபக்ச தனது அழைப்பை துண்டித்துள்ள சம்பவம் தற்போது செய்தியாக வெளிவந்துள்ளது.