பிரதான செய்திகள்

“நான் திருமணம் செய்து கொண்டால் விளக்கும் கோரி நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்னை அழைக்கும்”

முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ச தாம் ஏன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 10ம் திகதி நாமல் ராஜபக்ச தனது 31ம் பிறந்த நாளை கொண்டாடினார். நாமல் ராஜபக்ச ஏன் திருமணம் செய்தவனை காலம் தாழ்த்துகின்றார் என்பது குறித்து இந்த நிகழ்வின் போது பேசப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ள இது நல்ல வயது என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, “நான் திருமணம் செய்து கொண்டால் அதற்கான செலவு விபரங்களை விளக்குமாறு கோரி நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்னை அழைக்கும்” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு அஞ்சியே திருமணத்தை காலம் தாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச திருமணம் செய்து கொள்ளாதமைக்கான காரணம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச கடந்த 10ஆம் திகதி தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடினார். திருமணம் செய்யும் வயதை பூர்த்தி செய்துள்ள அவர் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

நாமலின் பிறந்த தினத்தன்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கால்டன் இல்லத்திற்கு சென்றிருந்ததுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு நாமலிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச தான் திருமணம் செய்து கொண்டால், “திருமணத்திற்கு செய்த செலவு குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்ல நேரிடும்” எனவும் இதனால், தனது திருமணத்தை தாமதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! விசனம் அடைந்த இணைக்குழு தலைவர்கள்

wpengine

ஹவாய் தீவுப்பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

Editor

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு

wpengine