பிரதான செய்திகள்

நான் கோத்தா! மஹிந்த,சந்திரிக்கா போன்று செயற்பட முடியாது

பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு.


எனவே உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவின் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.


இதற்கு பதில் வழங்குதற்கு முன்னர் கோட்டாபய, மஹிந்த தேசப்பிரியவுடன் தொலைபேசியில கலந்துரையாடியுள்ளார்.


எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளியாகவில்லை. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்போது கோட்டாபய ராஜபக்ச பதில் வழங்கியுள்ளார்.


எந்த சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது. தாம் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்று செயற்படமுடியாது.


“நான் கோட்டாபய ராஜபக்ச” உரிய சட்ட ஆலோசனைகளை நானும் பெற்றுள்ளேன். எனவே இது முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவிலேயே தங்கியுள்ளது.


தமக்கு இந்தவிடயத்தில் காமினி மாரப்பன, மனோஹரா டி சில்வா, ரொமேஷ் டி சில்வா போன்ற சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கோட்டாபய தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

wpengine

கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தூண்டப்படுகின்றதா?

wpengine

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

wpengine