மோட்டைக்கடை கிராம அலுவலராக கடமையாற்றி வருகின்றார்
தன்னுடைய பணி நேரங்களில் தனது மோட்டைக்கடை அலுவலகத்தில் இருப்பதில்லை.மாறாக நானாட்டன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருடனே காணப்படுகின்றார்.
இதனால் சேவையினை நாடிச்செல்லும் பொதுமக்கள் கிராம அலுவலரை அவரது அலுவலகத்தில் சந்திக்க முடியாத நிலைகாணப்பட்டது மேலும் பெண் நிர்வாக அலுவலர் மற்றும் கிராம அலுவலரின் செயற்பாடு பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
இதனால் விரக்தி உற்ற மக்கள் மன்னார் பதில் அரச அதிபரின் கவனத்திற்கு நானாட்டன் பிரதேச செயலகத்தில் கலாச்சார சீரழிவு கடமை நேரத்தில் நடைபெறுவதை சுட்டிக் காட்டியதை அடுத்து குறித்த பெண் நிர்வாக அலுவலர் உடனடியாக இடமாற்றப்பட்டார்.
மேலும் குறித்த பெண் நிர்வாக அலுவலர் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி 20 வருடங்களுக்கு மேலாக நானாட்டன் பிரதேச செயலகதில் கடமையாற்றிவந்தமை குறிப்படத்தக்கது.
நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக செயற்பட்ட அரசியல்வாதி வன்னி மாவட்டத்தை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது