Breaking
Sun. Nov 24th, 2024

நானாட்டன் பிரதேச செயலகத்தில்
அகிலன் காணி வெளிக்களப் போதனாசிரியாக கடமையாற்றி காலத்தில் கவணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவரின் உறவினருக்கு பரியாரிகண்டல் ஆற்றங்கரையில் ஒரு காணி காணப்பட்டது.

இக்காணியில் ஒருபகுதி இன்னொரு நபருக்கு காணப்பட்டது.

முழுக்காணியையும் அப்பெண்ணின் உறவினருக்கு முறைகேடாக வழங்க முற்பட்ட பொழுது அகிலனுக்கும் பகுதிக்காணி சொந்தக்காருக்கும் வாய் தர்க்கம் ஏற்ட்பட்டு தற்பொழுது அப்பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


மேலும் வங்காலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் ஆனாள் நகர்பகுதியில் 176 வீட்டுத் திட்டத்தில் அவுலின் குரூஸ் என்பவருக்கு அரசினால் வழங்கிய காணியை சட்டவிரோதமாக ஞானப்பா குரூஸ் என்பவருக்கு அகிலன் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் எமது இணையதளத்தால் சுட்டிக்கட்டப்பட்ட காணியானது ஆரம்பத்தில் பொதுக்தேவைக்கு என ஒதுக்கப்பட்டது.

பின்னர் இக்காணியை கனடாவிலும் இலங்கையில் இரட்டை குடியுரிமை கொண்ட ரியன்சிலி லம்பேட் என்பவருக்கு வழங்க அகிலன் முயற்சி எடுத்த பொழுது பொதுமக்களின் எதிர்பால் கைவிடப்பட்ட பின்னர் ஜெபமாலை யேசுதாசன் றெவல் என்பவருக்கு வழங்குவதாக கூறியே லஞ்சமாக ரூபா 50000/= பெறப்பட்டது.


வங்காலை துவரங்கோணி வீதியில் பலகாணிகளை சொந்தமாக கொண்ட ஆரோக்கியம் மார்க் என்வருக்கும் அவருடைய பிள்ளைகளும் அடாத்தாக காணியை பிடித்துள்ளார்கள். இக்காணி தொடர்பில் இதுவரை அப்பகுதி காணி வெளிக்களப்போதனாசிரியர் அகிலனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் ஆரோக்கியம் மார்க் அவர்களின் மகன் ஜெராட் மார்க் இவர் நானாட்டன் பிரதேச செயலகத்தில் கிராம அலுவலராக கடமையாற்றி வருகின்றார் இவர் அச்சங்குளம் பகுதியில் அகிலனுடன் இணைந்து பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது இதன் காரணமாக மன்னார் அரச அதிபரால் நேரடியாக விசாரணை உட்படுத்தப்பட்டமையும் குறிப்படத்தக்கது.


மேலும் தனது கடமை நேரத்தில் கணித பாட தனியார் வகுப்புகளையும் நானாட்டன் பிரதேச எல்லைக்குள் அகிலனால் நடாாத்தப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *