பிரதான செய்திகள்

நானாட்டான் பிரதேச சபையின் முடிவுகள் தன்னிச்சையான முறையில் நடைபெறுகின்றன.

நானாட்டான் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச் செல்வம் பரஞ்சோதி மறுத்துள்ளார்.

நானாட்டன் பிரதேச சபையூடாக அமுல் படுத்தப்படவுள்ள நான்கு வேலைத்திட்டங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதி இன்றி சபைக்குள் புகைப்படம் எடுக்க முடியாது என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அப்படி தெரிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், கருத்து வெளியிட்டுள்ள நானாட்டான் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
நானாட்டான் பிரதேச சபையின் 3ஆவது அமர்வு கடந்த 25ஆம் திகதி காலை இடம் பெற்றது. இதன்போது நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் நான்கு வேலைத்திட்டங்கள் வடமாகாண பிரதம செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், சபை உறுப்பினர்களாகிய எங்களின் சபை முன் மொழிவுகள் குறித்த வேளைத்திட்டங்ளுக்கு வழங்கப்படவில்லை.

சபையில் சில உறுப்பினர்களின் ஆதரவோடும், அரசியல் ஆதரவோடும் குறித்த திட்டத்திற்கு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டமானது ஒரு சில அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை உயர்த்தவே பயன்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நானாட்டன் பிரதேச சபையின் 16 உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய தீர்மானத்தை எடுக்குமாறு கோரியிருந்தோம்.

இதனை மறுத்த நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது என கூறிய நிலையில் சபை இரண்டாக பிரிந்து கருத்து பரிமாற்றம் இடம் பெற்றது.

இதன் போது தலைவர் கூட்டத்தை தன்னிச்சையாக ஒத்தி வைத்தார். மீண்டும் நேற்று நானாட்டான் சபா மண்டபத்தில் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கடந்த 24 ஆம் திகதி இடம் பெற்ற கலந்துரையாடலின் போது தலைவரின் கருத்துக்கள் சில முக நூலில் போடப்பட்டிருந்தது.

எனவே எதிர்வரும் காலங்களில் தான் அனுமதி வழங்கினால் மட்டுமே பத்திரிக்கையாளர்கள் அல்லது சபை உறுப்பினர்களோ படம் அல்லது காணொளி, ஒலிப்பதிவுகளை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தனது அனுமதி இன்றி எந்த ஊடகவியலாளர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலைவர் கடும் தொனியில் தெரிவித்தார்.

குறித்த 4 வேலைத்திட்டங்களையும் 15 உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவு செய்யுமாறு கோரியதற்கு தனது முடிவில் மாற்றம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்களினால் இயன்றவற்றை செய்யுங்கள் என கூறி கூட்டத்தை முடித்தார் எனவும் நானாட்டான் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இணைந்து தமது எதிர்ப்பை கூறியுள்ளனர்.

இது குறித்து நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதியிடம் கேள்வி எழுப்பிய போது, ஊடகங்களை நாம் எப்போதும் தடை விதித்தது இல்லை.

சபை நடவடிக்கைகளை பார்வையிட அவர்களுக்கு அனுமதி உண்டு. எனினும் சபை நடவடிக்கைகளின் போது மிக பொறுப்பில் உள்ள சபை உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வை காணொளி, ஒலிப்பதிவை மேற்கொள்ளுகின்றனர்.

இதனால் சபை நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூரை ஏற்படுத்துகின்றது. எனவே சபையில் உறுப்பினர்கள் ஒலிப்பதிவு செய்வதே தடை செய்யப்பட்டுள்ளதே தவிர ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை! ஆசு மாரசிங்க பா.உ

wpengine

5500 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம்!

Editor

எல்பிட்டிய பிரதேச சபை பசில் ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளது.

wpengine