பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நானாட்டன் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்த விளையாட்டு கழகங்கள்

மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்தில் உள்ள சுமார் 17கழங்கள் ஒன்றாக சேர்ந்து பொது விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்து தரக்கோரி இன்று பிரதேச செயலாளரிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார்கள்,என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்;

நானாட்டன் பிரதேச சபை விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நறுவள்ளிக்குளம் என்னும் கிராமத்தில் சில கோடி ரூபா பெறுமதியான பொது மாவட்ட மட்ட விளையாட்டு மைதான வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேலையில் இந்த கோரிக்கையினை இவர்கள் விடுத்துள்ளார்கள் எனவும்,

இந்த மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு அடிகல் நாட்டி வைப்பதற்கு விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்,வன்னி அபிவிருத்தி இணைக்குழு தலைவர்கள் றிஷாட் பதியுதீன்,மஸ்தான்,அடைக்கலம் நாதன், டெனீஸ்வரன் என பலர் கலந்துகொண்டார்கள்.

இதில் வன்னி மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் இணைக்குழு தலைவர் ஆன றிஷாட், மஸ்தான் ஆகியோருக்கு பிரதிகள் போடவில்லை எனவும் அறியமுடிகின்றது.

 

 

Related posts

“இணைந்த வடகிழக்கு” என்பது தமிழர்களின் கோட்பாடா ? அல்லது சாணாக்கியனின் கொள்கையா ? முஸ்லிம்களுக்கு கொள்கை இல்லையா ?

wpengine

கருணாவின் பிறந்த நாள்! பால்சோறு வினியோகம்

wpengine

பொலிகண்டி போராட்டம் கட்சி பேதமின்றி அணிதிரள்வோம் சிவசக்தி அழைப்பு

wpengine