உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. IMFஎனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.

அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கேரளாவை சேர்ந்தவர். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

Related posts

ஒன்றுகூடஉள்ள 4 முன்னாள் ஜனாதிபதிகள் ..!

Maash

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் களமிறங்குவார் – பிரசன்ன ரனதுங்க தெரிவிப்பு!

Editor

கனவில் அம்மன் சிலை! தோண்டிய பொலிஸ் மன்னார் எழுத்தூரில் சம்பவம்

wpengine