நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, கடந்த 26 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.