பிரதான செய்திகள்

நாட்டில் யுத்தப் பயம் நீங்கினாலும், தற்பொழுது பாதாள உலகப் பயம் இருக்கின்றது – ஞானசார தேரர்

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டில் எழுந்து வரும் மக்கள் அலையை கட்டுப்படுத்தும் ஒரு தந்திரோபாயமாக பாதால உலக கூட்டத்தினரை நடமாட விட்டுள்ளதாக பொதுபல சோன அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையினால் மக்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகின்றது.

நாட்டிற்குள் சட்டம் ஒழுங்கு இல்லையென்று நினைக்கும் அளவுக்கு விளையாட்டுக்கு கொலை செய்யும் நிலை உருவாகியுள்ளது. நாட்டில் யுத்தப் பயம் நீங்கினாலும், தற்பொழுது பாதாள உலகப் பயம் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தின் புலனாய்வுத் துறையினரை பலவீனப்படுத்தியதன் ஒரு விளைவே இதுவாகும். இந்த நிலையை உடன் நிறுத்தவில்லையாயின் நாடு அதலபாதாளத்துக்குள் விழுவதை யாராளும் தடுக்க முடியாமல் போகும் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

அம்பாரை பள்ளிவாசல் மீதான தாக்குதல் அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

பெண்களை கௌரவிக்க ஷிரந்தியை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா?

wpengine

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மன்னாரில் வீட்டுத்திட்டம்

wpengine