மதத்தில் மதம் பிடித்தவர்களை உண்மையான மதத்தவர்களாக கொள்ளமுடியாது என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக ரீதியாக வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மதங்கள் முன்னெடுக்கும்போது அது உயிர்ப்பலிகளுக்கு துண்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பினை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வழமைக்கு திரும்பி நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் எனவும் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்பதற்காகவும் மட்டக்களப்புதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆலயத்தின் நிர்வாக சபை மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இன்று விசேட பூஜைகள்நடாத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக ஆலயத்தின் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் விசேட வழிபாடுகளாக நடைபெற்றன. இந்த நிகழ்வின் போது காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு செல்லவும் நாட்டில் நீடித்த அமைதி நிலவி சமாதானம் ஏற்படவும் பூஜைகள் நடாத்தப்பட்டன.
இந்த வழிபாடுகளில் ஆலய வண்ணக்கர்கள்,ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர். எல்லா உயிர்களும் ஒன்று என்ற மனநிலையிலேயே மதத்தலைவர்கள் செயற்படுவார்கள்.
மதங்களை குழப்புகின்றளவுக்கு மதவாதிகள் என்று சொல்லப்படுகின்ற விசமிகளின் தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கவேண்டும்.
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இவ்வாறான விசமிகளை உலகத்தினைவிட்டே அகற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.