ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
வட மத்திய மாகாண முதலமைசச்ர் பேசல ஜயரத்ன இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி..
காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சவாலை எதிர்கொண்டுள்ளது.நெல் உற்பத்தி 40 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. வறட்சி காரணமாக வயல் நிலங்களில் அறுவடை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நாட்டின் அரிசி விலை அதிகரித்துள்ளது. அரிசியை கொள்வனவு செய்வதற்காக கடந்த வௌ்ளிக்கிழமை நான்கு நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பினேன். எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் நான்கு நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும்.
இதே வேளை பொலன்னறுவை பூஜா நகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் திம்புலாகல புதிய வலய கல்வி பணிமனையையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சின் வழிகாட்டலில் கீழ் செயற்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சமூக திட்டமும் ஜனாதிபதியினால் ஆரமபித்து வைக்கப்பட்டது.
இதன் போது கிராம சேவக உத்தியோகத்தர்கள் சிலருக்கு ஜனாதிபதியினால் டெப்களும் வழங்கி வைக்கப்பட்டன.