பிரதான செய்திகள்

நாட்டின் பொருளாதார முன்னோடிகள்உழைத்து கழைத்து நிற்கும் தொழிலாளர்களே!-காதர் மஸ்தான்-

நாட்டின் பொருளாதார முன்னோடிகளாக
உழைத்து கழைத்து நிற்கும் உலகத் தொழிலாளர்களுக்கு தனது மே தின நல்வாழ்த்துகளை பரிவுடன் தெரிவித்துக் கொள்வதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தனது தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் தொழிலாளர் வர்க்கத்தை பெருமைப்படுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் இந்த மே தினத்தைப் பெருமைப்படுத்துவதே எம் அனைவரினதும் உயரிய நோக்கமாகும்.

உடலை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர் வர்க்கமானது என்றுமே போற்றப்படக் கூடியவர்களே.

அவர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு வியர்வைச் சொட்டுக்களின் மொத்த உருவமே நாட்டின் பொருளாதார முன்னேற்றமாகும்.

உழைப்பின் முக்கியத்துவத்தை மேலோங்கச் செய்யும் இத்தினத்தில் உலகப் பொருளாதாரத்தில் முன்னோடிகளாக திகழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related posts

25 வயதான இளம் விஞ்ஞானி அமெரிக்க அழகியாக தேர்வு

wpengine

அடுத்த வாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்

wpengine