பிரதான செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

wpengine

மஹிந்த மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை

wpengine

நெடுந்தீவு வைத்தியசாலைக்கான தீர்வு கிடைக்கும்

wpengine