பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் சாத்தியம்!

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ஆயுதக்களஞ்சியசாலை தீ விபத்து ! மக்களை பார்வையிட்ட மஸ்தான் (பா.உ)

wpengine

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாள்

wpengine

வடமாகாண சபை உறுப்பினர்களை சந்தித்த சம்பந்தன்! முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை

wpengine