பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

சுயநலம் மேலோங்கி விடக் கூடாது. அரசியல் என்பது, வியாபாரம் ஆக மாறத் தொடங்குகின்றது

wpengine

ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

wpengine

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine