பிரதான செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இன்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருதில் ஹக்கீமுக்கு தடை! அச்சத்தில்

wpengine

கம நெகும நிதி மோசடி! பசில் விசாரணை

wpengine