பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கத் தயார்: ரத்ன தேரர்

நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கத் தயார் என அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் அறிவிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

எந்தவிதமான நிபந்தனையும் இன்றி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களாக ரத்ன தேரர் அரசாங்கம் தொடர்பில் வெளியிட்ட சில விமர்சனங்கள் ஆளும் கட்சிக் கூட்டங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான கூட்டமொன்றில் பங்கேற்ற போது நிபந்தனையின்றி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் என ரத்ன தேரர் அறிவித்துள்ளார்.

Related posts

தேர்தலை பிற்போடுவதற்கான சிவல் குழுவின் சூழ்ச்சி

wpengine

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கிறதோ, அன்றுதான் மே 18- சந்திரநேரு சந்திரகாந்தன்.

wpengine

நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர்தான் சஜித் பிரேமதாச

wpengine