நாடாளுமன்றம் அதன் அடிப்படை கடமைகளில் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தடயவியல் அறிக்கைகளின்படி 2010- 2011 மற்றும் 2015-2016 காலப்பகுதிகளில் இடம்பெற்ற பாரிய நிதிக் கையாடல்களை கண்டுபிடிக்க நாடாளுமன்றம் தவறிவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் நாடாளுமன்றம் பெரும்பாலும் வெளியாரின் தலையீடுகளுக்கே இடமளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடயவியல் அறிக்கைகள் தொடர்பில் கருத்துரைத்த அவர் இந்த அறிக்கைகளில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரின் வட்ஸ்எப், மற்றும் கைத்தொலைபேசிகளில் இருந்த அழிக்கப்பட்ட விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
எனவே நாடாளுமன்றம் இவற்றையும் பொறுப்புடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.