பிரதான செய்திகள்

நாடாளுமன்றக் கலைப்பு! அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை சற்று முன் வழங்கியது.

நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்க முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து நவம்பர் 12 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் மறுநாள் 13 ஆம் திகதி – ஏலவே பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது.

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான இந்த மனுக்களை விசாரித்த ஏழு நீதியரசர்மார் கொண்ட ஆயமே இன்று இந்த தீர்ப்பை வழங்கியது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே , விஜித் மலல்கொட , சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழாம் மனுக்களை விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலொன்றை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று மாலை வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன.

Related posts

பொரளை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 35 பேர் கைது!

Editor

தொலைபேசிகள் அழைப்புகளால் குழப்பத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும்

wpengine