நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துடன், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.