பிரதான செய்திகள்

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)
நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார்.


இன்று அதிகாலை 2017.06.06 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள எரிக்கப்பட்ட கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் சம்பவங்களை பார்வையிட்டதுடன் நிறுவன உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார்.

நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் உரையாடிய அவர் இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் முதற்தடவை அல்ல எனவும் ஏற்கனவே இந்தப் பகுதியில் 3வது தடவையாக கடைகள் எரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார். பொலிசார் தமது கடமைகளை விழிப்பாகச் செய்யாதவரை இனவாத நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் நிலைமைகளை விளக்கினார். ‘ஏத்தனையோ உறுதி மொழிகளை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய போதும் சட்டத்தின் பிடியிலிருந்து நாசகாரிகள் தப்பியே வருகின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கெதிரான நடவடிடக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை தொடர்ச்சியயாக தினமும் ஏதாவதொரு சம்பவங்கள் திட்டமிட்டும் குறித்த இலக்கை நோக்கியும் நகர்த்தப்படுவதை சட்டத்தின் காவலர்களும் அரசாங்கமும் புரிந்துகொண்டு இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று அமைச்சர் றிஷாட் குறிபபிட்டார்.
‘முஸ்லிம் சமூகம் ஒரு பீதியான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர் சாகலவிடம் தெரிவித்தார்.

Related posts

நிதி மோசடி நாமல் மீண்டும் கைது (விடியோ)

wpengine

பணத்திற்கு விலைபோகும் சிலர் கடந்த தினம் எமது கட்சியில் இருந்து வெளியேற்றம்

wpengine

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor