செய்திகள்பிரதான செய்திகள்

நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட மீன்பிடி படகு..!

சோமாலியாவில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை பிரகாரம் 24 மீற்றர் கொண்ட,  பிரமாண்ட மீன்பிடி படகு, சர்வதேச தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைவாக இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 3ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.   

தென் கொரியா, கென்யா, சுவீடன் மற்றும் நார்வே உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு மீன்பிடி படகுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது Danusha Marine நிறுவனம்.

Related posts

3 water projects in Sri Lnaka – Indian Export-Import Bank given Loan US$ 304 million

wpengine

சட்டவிரோத புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் சோதனை – இருவர் கைது!

Editor

அமைச்சர் ஹக்கீமுக்கு ஒரு மடல்

wpengine