(Mujeeb Ur Rahman)
நல்லிணக்கப் பொறிமுறை குறித்து ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட மன்னார் மாவட்ட குழுவின் அறிக்கையில் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் என்ற தலைப்பில், உள்ளடப்பட்டுள்ள விடயங்களின் சுருக்கத்தை இங்கு வெளியிடுகிறேன்.
சுமார் – 28 பக்கங்களில் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் என்னோடு தொடர்பு கொள்ளலாம்….
விடயங்கள்.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலைமாற்று கால நீதிப் பொறிமுறை தொடர்பான மக்கள் காலந்துரையாடலின்போது, மன்னார் மாவட்ட முஸ்லிம் மக்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.
• வடமாகாண (மன்னார்) முஸ்லிம்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அதற்கான நீதி சர்வதேச ரீதியாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.
• பலவந்த வெளியேற்றம் ஓர் இனச்சுத்திகரிப்பு, யுத்தக் குற்றம் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானது என்பதை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
• வடக்கு (மன்னார்) முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து விஷேட நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
• வடக்கு (மன்னார்) முஸ்லிம்களின் விடயங்களை மேற்பார்வை செய்வதற்கென்று தனியான அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வலுவலகம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
1. மீள்குடியேற்றம் – மீள்குடியேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்.
புத்தளம் – மன்னார் வீதி
வீட்டுத்திட்டம்
குடிநீர்
சுகாதாரம்
கல்வி
அரச நிருவாகம் (அரசியல் மற்றும் ஏனைய தலையீட்டினால் பாகுபாடு)
அர்த்தமற்ற இடங்களில் சமய ஸ்தலங்களை அமைத்தல்.
2. காணி விவகாரம்
காணிப் பங்கீடு (பாகுபாடான காணிப் பங்கீடு, பொருத்தமற்ற இடங்களில் காணி வழங்கியமை, அரசியல் தலையீடு)
அதிகரித்த சனத்தொகைக்கு வழங்க வேண்டிய காணிகள்
அரசுடமையாக்கப்பட்ட காணிகள். (இராணுவ, கடற்படை, பொலிஸ் மற்றும் காடுகளுக்காக)
விவசாயக் காணிகள். (காணிகள் பற்றாக் குறைவினால் விவசாயக் காணிகள் அழிக்கப்படுகின்றமை)
குடியிருப்புக் காணிகள்.
3. இராணுவ மயமாக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள்
4. தொழில் பிரச்சினை
மீன்பிடிப் பிரச்சினை
விவசாயப் பிரச்சினை
அரசாங்க உத்தியோகத்தர் எதிர்நோக்கும் பிரிச்சினை
வளங்கள் சூரையாடப்படுகின்றமை (மண், காட்டு மரங்கள்)
காட்டுத் தொழில்
ஏனைய வியாபாரம்
5. அபிவிருத்தி
வீட்டுத்திட்டம்
வீதி
போக்குவரத்து
சுகாதாரம்
கல்வி
நீர்ப்பாசனம்
ஏனைய அரச அலுவலகங்கள்
• காணாமல்போனார் அலுவலகத்தில் முஸ்லிம்களுக்கும் தனியான பகுதி வேண்டும்.
• நஷ்டஈட்டு அலுவலகத்திலும் முஸ்லிம்களுக்கு தனியான பகுதி வேண்டும்.
1. சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய நீதிப் பொறிமுறை மீது வடக்கு முஸ்லிம்களுக்கு பூரண நம்பிக்கையில்லை. இந்நீதிப் பொறிமுறை தங்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தராது. ஆனால், 1990 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 25 வருடங்களுக்கும் அதிகமான ஆண்டுகள் எந்த நீதியுமின்றி வாழ்ந்த நாங்கள் இப்பொறிமுறையின் மூலமாவது ஏதாவது கிடைக்கும் என்ற ஒரு சிறிய நம்பிக்கையின் மூலமே இக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்.