பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசுக்கு எதிராக ஜுன் 3ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

நல்லாட்சி அரசின் முகத்திரையைக் கிழிக்க ஜே.வி.பி. மாபெரும் போராட்டமொன்றை ஜுன் 3ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்த அவர்,

வரிச் சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு பண்மடங்கு உயர்ந்துள்ளது. அவர்களின் வருமானத்தில் எவ்வித மாற்றும் இல்லை.

ஆனால், வரிச் சுமையை மாத்திரம் சுமக்க வேண்டியுள்ளது.நல்லாட்சி என்று கூறிய மைத்திரி – ரணில் அரசு மக்களின் வாழ்க்கைச் செலவைக்குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது.

வற் வரி அதிகரிக்கப்படுவதால்பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வற்வரியின் தாக்கத்தின் பெரும் பங்கு மக்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. மாபெரும் போராட்டங்களைநாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக நாளைநாட்டின் அனைத்து பாகங்களிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளோம்.

ஜுன் மூன்றாம் திகதி கொழுப்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மாபெரும்ஆர்ப்பாட்டமொன்றையும் நடாத்தவுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஏறாவூரில் ஆடை மற்றும் கைத்தறி நெசவு தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

wpengine

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

wpengine

திருகோணமலை மாட்டிறைச்சிக்கடையில் வெள்ளை நிறத்தில் புளுக்கள்

wpengine