பிரதான செய்திகள்

நல்லாட்சியை தோற்கடித்து, இந்த கள்ளாட்சி, பதவிக்கு வந்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. 

ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்தி, முஸ்லிம் எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டிவிட்டுதான், நல்லாட்சியை தோற்கடித்து, இந்த  கள்ளாட்சி, பதவிக்கு வந்தது. 
ஆகவே சஹரான் குண்டு வெடிப்பு, இந்த கள்ளாட்சிக்கு, பாரிய உதவியாக அமைந்துள்ளது. 


இன்று, குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் பட்டியலை, ஆணைக்குழு  அறிக்கை தந்துள்ளது. 


அதில் முதலிடம் மைத்திரிபால சிறிசேன என்ற முன்னாள் ஜனாதிபதி மட்டுமல்ல, இந்நாள் ஆளுங்கூட்டணி தவிசாளர் மற்றும் மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட எம்பியும், சபையில் ஆளும் தரப்பின் முதல் வரிசையில் அமர்ந்துள்ள முதல் எம்பி.  
குண்டு வெடிப்புக்கு சில மாதங்கள் முன்னர் அவர் நல்லாட்சியை தடாலடியாக கலைத்து, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, ஒரு “அரசாங்கத்தை” 2018ம் வருடம் நியமிக்க முயன்றார் என்பதையும் மறக்க முடியாது.  


குண்டு வெடிப்பை தடுக்க தவறியோர் யார் என்பதை அடையாளம் காண்பதுடன், அதை விட, அதன் பின்னணியில் யார் இருந்தார்கள், அதன் மூலம் யார் பயன் பெற்றார்கள் என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும்.  


ஆகவே, “பேரினவாத பூமராங்” வளையம், அதை எறிந்த பேரினவாத மொட்டுகாரர்களை நோக்கியே, இப்போ திரும்பி வருகிறது. 
உயிர்த்த ஞாயிறு உதிர்த்த அப்பாவி உயிர்கள், எனது கொழும்பு கொச்சிக்கடையிலும்,  மட்டக்களப்பிலும் உயிரிழந்த தமிழ் கத்தோலிக்க உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டி, “வினை விதைத்தோர், வினை அறுக்கும்” Count Down படலம் ஆரம்பமாகிறது..!


(படத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில், கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்துக்கு எதிரில்…)

Related posts

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயம் இடம்மாறாது. அமைச்சர் றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

wpengine

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை மிக அழகாக அரங்கேற்றப்பட்ட நாடகம்.

wpengine

சம்பாந்துறையில் 17 வயது யுவதி தற்கொலை

wpengine