இலங்கையில், அகதிகளாக வந்துள்ள மியன்மார் மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமயம். படகுமூலமும் – விமானம் மூலமும் இலங்கைக்கு வந்த மியன்மார் மக்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தினால் (UNHCR)இலங்கையில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. இலங்கை அரசுக்கு ஒரு சதம்கூட செலவு இல்லை. ஒரு சில முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களும், தனவந்தர்களும் இவர்களுடைய விடயங்களில் உதவி ஒத்தாசைகள் செய்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடோன்றிற்கோ அல்லது அவர்களது சொந்த நாட்டின் நிலைமை சுமுகம் ஆகும் வரை இவர்கள் தற்காலிகமாக இலங்கையில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களின் முழு செலவையும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) பொறுப்பேற்றுள்ளது.
இங்கு கூட அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் இனவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தலைதூக்கியுள்ளது. இன்று அவர்கள் இலங்கையிலும் கூட மறைந்து ஒழிந்து மறைத்தும் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. இவர்களை நாம் ஒன்று கூடி கொலைசெய்வோம் என இனவாதி டான் பிரசாத் வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டு இருந்தான் என்பதை யாவரும் அறிந்த உண்மை. இதற்கு எதிராக, ஒரு சில முஸ்லிம் சட்டத் தரணிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இன்றுவரை அவன் விசாரணை செய்யப்படாமல் அவனின் இனவாத அடாவடித்தனமும் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனை விசாரிக்காமல் இருப்பதன் பின்னணி என்ன?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரால் (14/09/2017)மியன்மார் அரசை கண்டித்து, மாளிகாவத்தையில் இருந்து மியன்மார் தூதுவராளையம் வரை ஏற்பாடு செய்யப்பட ஆர்பாட்டத்துக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு, அவர்களின் ஆர்பாட்டம் மருதானையுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடந்த வாரத்தில் இருந்து(சண்டே லீடர் பத்திரிக்கை –Sunday leader 17/09/2017) , மியன்மார் நாட்டினருக்கான இலங்கை விசா நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மியன்மார் நாட்டவர்களை திருப்பி அனுப்பும் படி பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கு இணங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவினால் , கட்டுநாயக்க விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு சுற்று நிரூபம் அனுப்பப் பட்டுள்ளது.இதன் மூலமாக அகதிகளாகவோ எந்த காரணத்திற்காகவோமியன்மார் மக்கள் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இராஜ தந்திர கடவுச் சீட்டுக்களைத் தவிர.
இன்று வரை, பிரதமரோ, ஜனாதிபதியோ மியன்மார் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எதிராக ஒரு கண்டனமோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் குண்டுவெடிப்புகள், இயற்கை அனர்த்தம், வடகொரிய அணுஆயுத சோதனைக்கும், பாரிஸ் குண்டுவெடிப்பு, சிறு சிறு சில்லறை விடயங்களுக்கும் கண்டனமும் அனுதாபமும் தெரிவிக்கும் அரசாங்கம். பல ஆயிரம் மக்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து உடமைகளை அழித்து நாட்டை விட்டு அப்பாவி மக்களை விரட்டியடிக்கும் இனச்சுத்திகரிப்புக்கு எதிராக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் இருக்கின்றனர்.
முஸ்லிம்களின் வாக்குகளால், உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இது எங்களுக்குக் தருகின்ற இன்னொரு பரிசா