பிரதான செய்திகள்

நல்லாட்சியில் கிராம மக்களுக்கு எந்ந அபிவிருத்தியும் இல்லை-சீ.பீ.ரத்நாயக்க

சாதாரண மக்களை நோக்கிய அல்லது கிராமிய மட்டத்தில் எந்த ஒரு அபிவிருத்தியும் நடப்பு அரசாங்கத்தில் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற அபிவிருத்தியை தரகு பணத்திற்காகசெய்யப்பட்டதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் எந்த அபிவிருத்தியும் செய்யவில்லை எனவும், அபிவிருத்தி என்ற பேரில் பல மோசடிகளை செய்து வருவதாகவும்சி.பீ.ரத்நாயக்க கூறினார்.

அபிவிருத்தி தொடர்பில் கடந்த ஆண்டில் நிதி மோசடி இடம் பெற்றதாகவும் மேலும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரனையை முன்வைக்க உள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

Related posts

முன்னால் அமைச்சர் ராஜபஷ்சவுக்கு !உலமா சபை கண்டனம்

wpengine

பேஸ்புக் பதிவு மூலம் நாட்டு மக்களுக்கு சஜித் அறிவித்தல்

wpengine

பசிலை கடுமையாக தீட்டிய மஹிந்த

wpengine