Breaking
Sun. Nov 24th, 2024

“மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி முஸ்லிம்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கௌரவித்தார்.”

மஹிந்த ராஜபக்சவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு இதனை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் புதிய ஆளுநர்கள் நேற்று நியமனமிக்கப்பட்டனர். இந்த நிலையில், இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாதம் இன்று, நேற்று வந்ததல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறு உண்டு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இனவாதம் சற்று மேலோங்கியது.

ஆனால் இதற்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. கடந்த ஆட்சியில் இனவாதிகள் நின்ற வேகத்திற்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தால், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.

எமது ஆட்சிக்காலத்தையும், இப்போது உள்ள அரசாங்கத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, கடந்த ஆட்சியின் அருமையை புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன், தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா? இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவைகள் ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா?
இதேவேளை, எமது ஆட்சிக்காலத்தில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா கடைமையாற்றினார்.

இலங்கையில் உள்ள மாகாணங்களில் மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமை இனவாதமற்ற அரசியல் நகர்வை அறிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *