பிரதான செய்திகள்

நல்லாட்சியின் கூற்றுப்படி மஹிந்த இந்த நாட்டில் அரசியல் பலம் மிக்கவர்.

(அ.அஹமட்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக் காலத்தில் ஞானசார தேரரை முன்னாள் ஜனாதிபதி இயக்குவதான மிகப் பெரும் குற்றச் சாட்டு நிலவியது. இந்த குற்றச் சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவுடைய அணியினர் எப்படியெல்லாம் மறுக்க முடியுமோ அப்படி எல்லாம் மறுத்து பார்த்தார்கள். இருந்தாலும் அதனை அன்று முஸ்லிம் சமூகம் செவிமடுக்க தயாராக இருக்கவில்லை.

நாய்க்கூண்டு கதையோடு ஆட்சிக்கு வந்த இவ்வரசினது ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி காலத்தில் இருந்ததை விட பொது பல சேனாவின் கை ஓங்கி காணப்படுகிறது. இது பல்வேறு விடயங்கள் மூலம் நிரூபணமாகி வருகிறது. அண்மைக் காலமாக பொது பல சேனா அமைப்பின் செயலாளரை நான்கு போலீஸ் குழுக்கள் அமைத்து பொலிசார் தேடி வந்தனர். இப்படியானவருக்கு மிகவும் எளிதாக பிணை வழங்கப்பட்டுள்ளது. இப்படி இலகுவாக அவருக்கு பிணை வழங்கப்படும் என்றிருந்தால் அவர் எப்போதே நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருப்பார். அவர் தனது பிணை கிடைக்கும் என்ற உறுதி மொழியின் பின்பே வந்துள்ளார் என்பது தெளிவானது.

அவருக்கு பிணை வழங்கிய வேகம், அதற்காக பொலிசார் செயற்பட்ட விதம் ஆகியன யாவரும் அறிந்ததே. பொலிசார் அறிக்கையில், நீதி மன்ற தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலையிட்டு செல்வாக்கு செலுத்துமளவு எந்த அதிகாரமும் அவருக்கில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது மகனுக்கு பிணை வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட விடயம் நடந்தேறியுள்ள நிலையில் இதுவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் செயல் தான் என ஒருவர் நம்புவாராக இருந்தால் அவரை விட அறிவிலி யாராகவும் இருக்க முடியாது.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர் ஞானசார தேரரை கண்டிக்காமையை வைத்து அரசியல் செய்தார்கள். அதே ஆட்சி அதிகாரம் அவர்களிடம் சென்றுள்ள போது மாட்டிக்கொண்டு முளிக்கின்றார்கள். அவர்களால் மெல்லவும் முடியாது வெளியே துப்பிவிடவும் முடியாது. இன்னும் இன்றைய ஆட்சியாளர்கள் சிலர் இது விடயத்தில் மகிந்தவை குற்றம் சுமத்தி கொண்டிருக்கின்றனர். அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதிக்கு அடங்கி ஒடுங்கி ஆட்சி செய்வதை விட அவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகுவது சிறந்தது. அதிகாரம் அற்ற பொம்மை ஆட்சி எதற்கு?

Related posts

“ஒரு நாடு ஒரு சட்டம்” ஞானசார தேரருக்கு மட்டும் தனி சட்டமா? ஏன் எழும்பவில்லை

wpengine

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை

wpengine

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

wpengine