செய்திகள்பிரதான செய்திகள்

நல்லதண்ணி பாடசாலை மாணவி அதிக மாத்திரை விழுங்கி உயிரிழப்பு ..!

நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரை விழுங்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம் பெற்றுள்ளது.

சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளாரென மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் உடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அந்த மாணவியின் உடற் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி பி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/EuAtDr7KEaH0ADVKTTsbGK

Related posts

ட்ரோன் கமரா மூலம் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நடவடிக்கை வவுனியாவில்

wpengine

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

wpengine

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

wpengine