உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நயன்தாராவின் காதல் தின செய்தி

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வந்த திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் என்பதால் ‘காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் அறிவிப்பு மட்டுமின்றி விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், ஏற்கனவே மூன்று பாடல்களை கம்போஸ் செய்து விட்டதாகவும் இன்னும் இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை லலித் தயாரித்து வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் ’கோப்ரா’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

wpengine

கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .

Maash

வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

Maash