பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முக்கிய அமைச்சர் மற்றும் வர்த்தகர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரும் முக்கிய வர்த்தகர் ஒருவருமே பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னிலையில் இருந்துசெயற்பட்டுள்ளனர்.

குறித்த அமைச்சர், நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வாக்களிக்கவில்லை.

அதேநேரம் வர்த்தகர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கியதொடர்புடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறைந்தது அரசாங்கத்தின் ஐந்து அமைச்சர்களின் கையொப்பங்கள் இன்றிநம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ச கூட்டுஎதிரணிக்கு ஆலோசனை தெரிவித்திருந்தார்.

அத்துடன் அரசாங்கத்தில் இருந்து இந்த பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும். அதற்குஎதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் என்ற ஆலோசனையையும் அவர் வழங்கியிருந்தார்.

எனினும் கூட்டு எதிரணியினர் அதனை கருத்திற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போராளிகள் வெளியேற்றம்

wpengine

சாய்ந்தமருதில் பள்ளிவாசல் தலைவர்கள், இமாம்களுடனான விஷேட கலந்துரையாடல்

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine