பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும்

பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும். பிரேரணையை காலதாமதப்படுத்தாது உடனடியாக கொண்டுவர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தத்தை தனிநபர் பிரேரணையாக புதுவருடத்தின் பின்னர்  கொண்டுவருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

நடைமுறை செயற்பாடுகளின் அதிருப்தியை அடுத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக கூறியதுடன் இன்று தமது பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைத்தனர். இதில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 51 பேரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 4 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடிய நிலையில் அடுத்த மாதம் 4ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரணையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

wpengine

வவுனியா கிராம சேவையாளர் லஞ்சம்! ஆணைக்குழு கைது

wpengine

உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுதாபம்.

wpengine