Breaking
Mon. Nov 25th, 2024
(எஸ்.எச்.எம்.வாஜித்)

வடமாகாணத்தில் இருந்து படுகொலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களிலே அனாதை துயருடன் அடைபட்டு அவதிப்பட்ட வேலையில் இம்மக்களின் துயர் தீர்த்து சுதந்திர மீள்குடியேற்றம் செய்யப்புறப்பட்டவர்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்.

முசலிப்பிரதேச மீள்குடியேற்ற விடயத்தில் அன்றைய அன்னாரின் இணைப்புச் செயலாளாராக இருந்த அலிகான் ஷரீப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கௌரவ அமைச்சர் வடமாகாணத்தில் முதன் முதல் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவ்வேலை முசலிப்பிரதேசம் கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து என்பதை முசலி சமூகம் மறந்துவிட முடியாது.

முசலியின் மீள்குடியேற்றம் பற்றி யாரும் சிந்திக்காத வேலை கூட தனது பாதுகாப்பை அல்லாஹ்வின் மீது சாட்டியவராக உயிரை கூட துச்சம்  என நினைத்து கடற்புலிகளுக்கு லஞ்சம் கொடுத்து முசலிப்பிரதேசம் முழுவதிலுமுள்ள வீட்டுக்காணிகளையும்,விவசாயக்காணிகளையும் பல கோடி ரூபா செலவு செய்து மீள்குடியேற்றம் உருவாக்கப்பட்டது.

அச்சமயம் முதன் முதலில் மீள்குடியேறிய கிராமங்களான பூநொச்சிக்குளம் 11 வீடுகளையும்,மணற்குளத்தில் 48 வீடுகளையும்,பண்டாவெளியில் 17 வீடுகளையும்,இலந்தைக்குளத்தில் 10 வீடுகளையும்,கூளாங்குளத்தில் 46 வீடுகளையும், நீயாப் (NEHAP) திட்டத்தின் ஊடாக கௌரவ அமைச்சர் பெற்றுக்கொடுத்தார் என்பது முசலியின் மீள்குடியேற்ற வரலாறு என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

அத்துடன் மின்சாரம்,வீதி திருத்தம்,பாடசாலை,பள்ளிவாசல்கள் புனரமைப்பும் புதிய நிர்மானமும்,தேக்கங்கள் குளங்கள் புனரமைப்பும்,புதிய கட்டமைப்பும் ஏற்படுத்தி மக்களுக்கு மகத்தான பணி புரிந்தார். இன்னும் புரிந்துகொண்டு இருக்கின்றார்.

கடந்த 15 வருட காலத்தில் முசலியின் முழு அபிவிருத்திகளையும்,தன் சொந்ந முயற்சியாலும் அரசுகளின் உதவியாலும் அளப்பெரிய சேவைகளை முசலிப்பிரதேச மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார். என்பதை நன்றியுணர்வுள்ள முசலி மக்கள் மறக்கமாட்டார்கள் என்பது திண்ணம்
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *