(ஜெமீல் அகமட்)
தலைவர் அஸ்ரப் நினைவு நாள் கொண்டாடுகின்றனர் தலைவரின் பெயரை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றவர்கள் இவர்கள் யார் இவர்கள் நோக்கம் என்ன என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் அஸ்ரப்பின் எதிரிகள் என்று தான் கூற வேண்டும்.
இவர்கள் எங்கள் தலைவர் அஸ்ரப் என்று வாய் கூசாமல் சொல்கின்றனர் ஆனால் மறைந்த தலைவர் விட்டு சென்ற பாதையில் செல்ல முடியாமல் அந்த தலைவருக்கு துரோகம் செய்கின்றனர்.
கடந்த 1996 ம் ஆண்டு மறைந்த தலைவரின் கையால் அடிக்கல் நாட்டிய நிந்தவூர் கலச்சார மண்டபம் இன்று வரை கட்டி முடியாமல் மிருகங்கள் வாழும் மண்டபமாக காட்சி அளிக்கிறது அஸ்ரப்பின் பிச்சையில் சொகுசா வாழும் ஹக்கீம் கூட்டம் அந்த மாமனிதர் ஆரப்பித்த கட்டிடத்தை கட்டி முடிக்க வக்கில்லாத நீங்கள் இன்று மக்களை ஏமாற்ற அஸ்ரப் நினைவு தினம் கொண்டாட வெட்கம் இல்லையா? உங்களது பூச்சாண்டி வேலைஙகள் இனி கிழக்கு மக்களிடையே செல்லுபடியாகாது.
மறைந்த தலைவர் விட்டு சென்ற பாதையை புதிய தலைவர் செய்வது தான் நடை முறை இதை விடுத்து மறைந்த தலைவர் மக்களுக்காக ஆரம்பித்த கட்சியின் யாப்பை தனது சுயநலனுக்காக கன்டியில் வைத்து கபடத்தனமாக மாற்றியது கட்சியின் சொத்தை அபகரிப்பு செய்தது அஸ்ரப்போடு இனைந்து கட்சி உருவாக துணை நின்றவர்களை விரட்டி விட்டு அஸ்ரப் மௌத்து செய்தி கேட்டு வெடி சூட்டு இனிப்பு வழங்கியவர்களை கட்சியில் சேர்த்தது அஸ்ரப் நம்பிக்கை கொண்ட ஹசன் அலிக்கு ஆப்பு அடித்தது அஸ்ரப் அவர்களின் இலட்சியமான கரையோர மாவட்டத்தை அமைக்க முயற்சி செய்யாமை அஸ்ரப்பின் கொள்கையினை புறந்தள்ளி அந்த மனிதனுக்கு பல துரோகம் செய்து கட்சியை அழித்து கொண்டு சமுதாயத்தில் பித்னாவை உருவாக்கி சொகுசா வாழும் ஹக்கீம் நாசாவில் அஸ்ரப்பின் நினைவு நாள் கொண்டாடினாலும் மண் அறையில் தூங்கும் மாமனிதர் அஸ்ரப் ஏற்றுக் கொள்ளமாட்டார் மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அஸ்ரப் அவர்களின் கொள்கையை காலால் மிதித்து விட்டு தலைவனாக இருந்து அஸ்ரப் நினைவு தினம் எதற்காக ?எல்லாம் தலைமை பதவிக்காக.
கடந்த பல வருடங்கள் நினைவு தினம் என்றால் என்ன என்று அறியாமல் இருந்த ஹக்கீம் இப்போது இலங்கை முஸ்லிம்கள் தேசிய தலைவர் றிஷாட் என ஏற்றுக் கொண்டதையும் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை என இருந்த அம்பாறை மாவட்டம் இப்போது மக்கள் காங்கிரசாக மாறிவிட்டது அதனால் றிசாத்தின் வருகையை கண்டு அச்சத்தில் கொண்டாடும் அஸ்ரப் நினைவு நாள் தான் என்பது மக்களுக்கு தெரியும் இன்று மக்கள் சந்திக்கு சந்தி பேசிக் கொள்கின்றனர் அவர்கள் பேசுவதும் உண்மை தான்.
மறைந்த தலைவர் நலமுடன் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தில் வாழ ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் இன்று துஆ செய்துள்ளனர் அதனால் அஸ்ரப்பை மறைந்த ஹக்கீம் கூட்டம் அரசியல் சந்தையில் (தாருஸ்லாமில் )போலி வேஷம் போட்டு நினைவு தினம் கொண்டாயது கிழக்கு மக்களை ஏமாற்ற ஆனால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உங்களை விரட்டுவது உறுதி.