Breaking
Sun. Nov 24th, 2024

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் –

அபிவிருத்தியடைந்த விவசாயப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புதல்,

எதிர்வரும் தசாப்தத்துக்குள் தேசிய மற்றும் சர்வதேச நுகர்வோருக்கு, நஞ்சற்ற விவசாய உற்பத்திகளைப் பெற்றுக்கொடுக்கச் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளல்,

மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பயிர்களை அறிமுகப்படுத்தல் ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மண் மற்றும் நீருடன் கலக்கும் இரசாயனக் கழிவுகளைக் குறைத்துக்கொண்டு,

வாழ்வாதார முறைமைகளின் ஊடாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஆரோக்கியமான பசுமை விவசாயத்தை அறிமுகப்படுத்துவதே –

அரசாங்கத்தின் முதன்மைக் குறிக்கோளாக இருக்கின்றது.

நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு மற்றும் சேதனப் பசளைப் பயன்பாட்டுடனான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல் மூலம் –

நிலையான பசுமை விவசாயத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.

இதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம், பாதகமான வேளாண்மை இரசாயனங்களைக் குறைத்துக் கொள்வதற்கும்,

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதும் தேசிய சுற்றுச்சூழல் நிலைமைகளுக்குப் பொருத்தமானதுமான சேதனப் பசளை உற்பத்திக்குத் தேவையான ஊக்கப்படுத்தல்களை வழங்குவதற்கான அவசியத்தைக் கருத்திற்கொண்டு –

நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் பிரகாரம், மேற்படி ஜனாதிபதி செயலணியை உருவாக்கியுள்ளேன்.

திரு. விஜித் வெலிகல அவர்களின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த ஜனாதிபதி செயலணியில்,

14 உறுப்பினர்கள் அங்கம்வகிக்கின்றனர்.

எனது மேலதிகச் செயலாளர் வர்ணன் பெரேரா அவர்கள், இந்த ஜனாதிபதி்செயலணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பசுமை விவசாயத்துக்கான மேற்படி செயலணி உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் வருமாறு:

  1. திரு. விஜித் வெலிகல – தலைவர், வயில்ட் ஹொலிடேஸ் (தனியார்) நிறுவனம்.
  2. திரு. லலித் செனவிரத்ன
  3. திரு. எஸ். கே. பீ. கசுன் தாரக்க அமல் – பணிப்பாளர், பயோடெக்னொலஜி பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
  4. திரு. மாலிந்த செனவிரத்ன – பணிப்பாளர், ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
  5. திரு. ஆர். பீ. ரசிக்க துசித்த குமார – காலநிலை வேளாண்மை ஒருங்கிணைப்பாளர்/ வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான சுற்றுச்சூழல் நட்புறவு விவசாயப் பயிற்சி ஆலோசகர்
  6. பேராசிரியர் பீ. கே. ஜே. காவன்திஸ்ஸ – பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர், “சியபத்த” சர்வதேசக் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் (தனியார்) நிறுவனம்.
  7. திரு. சமந்த பெர்ணான்டோ – கான்கர ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம்
  8. திரு. சமுதித்த குமாரசிங்க – லங்கா பயோ ஃபெர்டிலைஸர் தனியார் நிறுவனம்.
  9. திரு. அஜித் ரண்துனு – கிரீன் ஃபோசர் அக்ரிகல்ஷர் தனியார் நிறுவனம்.
  10. திரு. என். எம். கலீட் – லங்கா நேஷர் பவர் தனியார் நிறுவனம்
  11. ஶ்ரீமதி. ஷம்மி கிரிந்தே – பயோ ஃபுட்ஸ் தனியார் நிறுவனம்
  12. திருமதி. நிர்மலா கரவ்கொட – ஹய்சொங்க் ஓ.என்.பீ தனியார் நிறுவனம்
  13. திரு. ஷமிந்த ஹெட்டிகண்காணம்கே – ஆர்.கே.ஜீ. பயோ கிரீன் ஃபாமர்
  14. திரு. நிஷான் டீ சில்வா – லோரன்ஸ் லிக்விட் ஃபர்டிலைஸர்

பசுமை விவசாயத்தை நிலையாகப் பேணுவதற்குரிய முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்,

பல்வேறு பயிர்களுக்கும் தேவையான சேதனப் பசளைகளை அடையாளம் கண்டுகொள்ளல்,

மற்றும் அந்தப் பசளை உற்பத்தியை மேற்படுத்தல்,

பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை தேசிய அளவில் உற்பத்தி செய்துகொள்ளல்,

தேசிய உற்பத்திகளின் ஊடாகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது ஏற்படக்கூடிய பற்றாக்குறையை –

உயர் தரத்திலும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதியுடனும் –

வரையறுக்கப்பட்ட அளவில் இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் மேற்பார்வை முறைமைகளை அடையாளம் கண்டுகொள்ளல்,

சேதன உணவு உற்பத்திகள் மற்றும் நுகர்வு ஆரோக்கியம், சமூக மற்றும் பொருளாதாரப் பிரதிபலன்களை மக்கள்மயப் படுத்துவதற்கான தொடர்பாடல் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்,

இந்த வேலைத்திட்டத்துக்காக அனைத்து அரச துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளல்,

மற்றும் கள ரீதியில் சேதன வேளாண்மை விரிவாக்கச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பொறுப்புகள் என்பன –

இந்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் –

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி,

மற்றும் காலநிலை மாற்றத்துக்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி –

ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், மேற்படி பசுமை விவசாயத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு, இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பணி ஆணை வழங்கியுள்ளேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *