பிரதான செய்திகள்

தோட்ட தொழிலாளர் விடயத்தில் ரணிலின் நரித்தந்திரத்தை காணமுடியும்

நவீன் திசநாயக்கவை தோட்ட தொழிலாளர் சங்க தலைவராக நியமித்தமை ரணில் விக்ரமசிங்கவின் நரித்தந்திரமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஜனகன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,


தோட்ட தொழிலாளர் சங்க தலைவராக நவீன் திசநாயக்கவை நியமித்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியை தனது வீடுபோல் வைத்திருக்கும் ரணில் தந்து நரித்தந்திரத்தை காண்பித்துள்ளார்.


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் போராடிக்கொண்டிருக்கும் போது நவீன் திசநாயக்க அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத போது அவரை தோட்ட தொழிலாளர்களுக்கு தலைவராக நியமித்துள்ளமை வெளியே பயிரை மேயும் கதையாகும் என்று கூறியுள்ளார்.

Related posts

பலஸ்தீன முக்கிய புள்ளிக்கு கொரோனா! பலத்தீன விடுதலை இயக்க நிறைவேற்று உறுப்பினர்.

wpengine

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

wpengine

13வருட காதலிக்கு கட்சியில் உயர் பதவி வழங்கிய கிம் ஜோங் வுன்

wpengine