உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தொழுகை விட்டு வெளியில் வந்த மாகாண சபை உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தானில் ‘முத்தாஹிதா குவாமி இயக்கம்-பாகிஸ்தான்’ கட்சியின் சிந்து மாகாணசபை உறுப்பினர் கவாஜா இஸருல் ஹசன். இவர் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கராச்சியில் சிறப்பு தொழுகையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர். 

அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் போலீசாரின் சீருடையில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே அவரது பாதுகாவலர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் அந்த நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய ஒரு நபர், பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு நபர் காயங்களுடன் தப்பிச் சென்றுவிட்டார். 5 பேர் காயமடைந்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டதால், கவாஜா இஸருல் ஹசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

இந்த கொலை முயற்சிக்கு பிரதமர் அப்பாசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளா. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யம்படி உத்தரவிட்டுள்ளார். ஹசனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

Related posts

இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிக்க கியூபா, எல்சல்வடோர் ஒத்துழைப்பு

wpengine

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு!

Editor

வடிவேலின் பாணியில் பொலிஸ் முறைப்பாடு! திருக்கோவில் பிரதேச செயலகம் தடை

wpengine