(முஸ்லிம் எயிட் ஊடக பிரிவு )
வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட சமய கல்லூரி ஆசிரியர்களுக்கான விசேட நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (28) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது.
செயலாளர் அஷ்சேய்க் முபாறக், மௌலவி முர்சித், IBA (UK) அமைப்பின் செயலாளரும் அ.இ.ஜ.உலமாவின் கல்வி வளவாளருமான சகோ. நமீஸ், முஸ்லிம் எயிட் ஊழியர் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்று நிவாரணப் பொதிகளை வினியோகம் செய்தனர்.
‘தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்’ என்ற தொணிப்பொருளின் கீழ் ஆசிரியர்கள், அலுவலக சிற்றூழியர்கள், சமய கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள், ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் செயற்பாட்டின் மூன்றாவது கட்ட வினியோக நிகழ்வு இதுவாகும்.
சென்ற வாரங்களில், அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் சமய பாடாசாலைகள், கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கான விசேட நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.